செங்காந்தள் (Chenkaantal) 

அறிஞர்களால் மதிப்பீடு செய்யப்படும் தமிழ் ஆய்விதழ்

Archives | English Version

வணக்கம்
          செங்காந்தள்பூ குறிஞ்சி நில தெய்வமான முருகனின் அடையாளப்பூ ஆகும். போர் கடவுளான முருகன் பிறந்த கார்த்திகை மாதத்தில் இதன் பூ அகல்விளக்கு போல பூப்பதால் கார்த்திகைப்பூ என்றும் அழைக்கப்படுகிறது. கரும்பு மூசாசச் சுடர்பூங் காந்தள் பெருந்தண் கண்ணி மிலைந்த சென்யன் என்ற திருமுருகாற்றுப்படை பாடல் வண்டு இனங்கள் மொய்க்காத நல்ல மணமுடைய, நெருப்புப் போன்ற செந்நிறம் மற்றும் ஒளியுள்ள செங்காந்தள் பூவாலாகிய குளிர்ச்சியுடைய மாலையை சூடியவன் முருகன் என்று வர்ணிக்கிறது. தமிழர்களின் வீரம் மற்றும் கலாச்சார பெருமையை அடையாளப்படுத்தும் செங்காந்தள் மலரின் பெயரை இவ்ஆய்விதழுக்குச் சூட்டுவதழில் அகமகிழ்வடைகிறேன்.
          செங்காந்தளின் அழகிய முகை தன் இதழ் விரியும் வரை வண்டுகளைக் காத்திருக்க வைக்காமல் வண்டு வந்தவுடன் அதனை எதிர்நோக்கி தம் இதழை விரித்து தேனைத் தந்து வண்டினை மகிழ்ச்சிப்படுத்தும். செங்காந்தள் தன்னுள் உள்ள தேனை அடக்கி வைத்திருப்பது போன்று கல்தோன்றி மண்தோன்றா காலந்தொட்டே தமிழ்மொழி அரிய இனிய செய்திகளைத் தன்னுள் அடக்கி வைத்துள்ளது. தேனைப் பருக வண்டுகள் அணிவகுப்பது போல் தமிழ் சமூகம் தமிழ்த்தேன் பருக; ஆய்வாளர்கள், தமிழ்ப்பேராசிரியர்கள், ஆர்வலர்கள் தங்கள் எழுத்தாற்றலை அர்ப்பணிக்க ஆயத்தமாயுள்ளனர். அவர்களின் தரமான ஆய்வுப்படைப்புகளை உலகளாவிய ஆய்வுத்தளத்திற்குக் கொண்டு செல்வதே செங்காந்தள் ஆய்விதழின் நோக்கமாகும்.
 

அழைப்பு
ஓராண்டிற்கு இருமுறை வெளிவரும் செங்காந்தள் அறிஞர்களால் மதிப்பீடு செய்யப்படும் தமிழ் ஆய்விதழ் ஆகும். கார்த்திகை, வைகாசி (நவம்பர், மே) ஆகிய மாதங்களில் ஆய்வுக் கட்டுரைகள் பிரசுரம் செய்யப்படும்.. கட்டுரைகளைப் புரட்டாசி, பங்குனி ஆகிய மாதங்களில் சமர்ப்பிக்கவும். ஆய்வுக் கட்டுரைகளை chenkaantal@pandianeducationaltrust.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். ஆய்வுக் கட்டுரைகள் பசுமைச் சூழல் நலன் கருதி ஆண்டிற்கு இருமுறை இணையதளம் வழியாக வெளியிடப்படும். ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், எழுத்தாளர்கள் தங்களது நேர்த்தியான ஆய்வுக்கட்டுரைகளை வழங்க வரவேற்கப்படுகிறார்கள். 
நெறிமுறைகள் மற்றும் கொள்கைகள்
 

ஆய்வுக் கட்டுரையின் அளவு
ஆய்வுக் கட்டுரை  ஏ4 தாளில் 12 அளவு, 1.5 இடைவெளியுடன்,15 பக்கங்களுக்கு மிகாமல் ஏரியல் யுனிகோடு (தமிழ்), டைம்ஸ் நியூரோமன் (ஆங்கிலம்) எழுத்துருவில் தட்டச்சு செய்து இருக்க வேண்டும். அடிக்குறிப்புகள், பாடல் எண், பக்க எண் மற்றும் துணைநூல் பட்டியல் (தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்) இடம் பெற்றிருக்க வேண்டும்.
 

தலைப்பு பக்கம்
தலைப்பு பக்கம் பெயர், சுருக்கமான தலைப்பு, முகவரி, மின்னஞ்சல் முகவரி கொண்டிருக்க வேண்டும். ஆய்வுச் சுருக்கம்: 250 – 300 வார்த்தைகள் கொண்ட தமிழ் மற்றும் ஆங்கில ஆய்வுச்சுருக்கம் தர வேண்டும். குறியீட்டுச் சொற்கள்: 5 – 6 வேண்டும்.
 

கட்டுரைகளின்  அமைப்பு
ஆய்வுக்கட்டுரைகள் தரமானதாக அமைய வேண்டும் (4000 – 7000 வார்த்தைகள்). “ஆராய்ச்சி நெறிமுறைகள்” (தமிழ்) உலகத் தமிழாராய்ச்சி நிறவனம் மற்றும் தற்போதைய எம்.எல்.ஏ 8ம் பதிப்பு (ஆங்கிலம்) பின்பற்றப்பட வேண்டும்.
 

மேற்கோள்
நேர்த்தியான குறிப்புகளை மேற்கோளிட்டு குறிப்புப்பட்டியலில் இடம் பெற்றிருக்கிறதா என உறுதி செய்து கொள்ள வேண்டும்.

குறிப்புப்பட்டியல்
ஆய்வாளர்கள் தங்கள் பயன்படுத்தும் புத்தகங்கள், ஆய்விதழ்கள், ஆய்வுக் கட்டுரைகள், ஆய்வேடுகள் மற்றும் இணையதள தரவுகள் போன்றவற்றை அகரவரிசையில் பின்பற்ற வேண்டும்.
 

ஒப்படைப்பு முறை
ஓராண்டிற்கு இருமுறை வெளிவரும் செங்காந்தள் (அறிஞர்களால் மதிப்பீடு செய்யப்படும் தமிழ் ஆய்விதழ்) கட்டுரைகளைக் கார்த்திகை, வைகாசி (நவம்பர், மே) ஆகிய மாதங்களில் பிரசுரம் செய்யும். கட்டுரைகளைப் புரட்டாசி, பங்குனி ஆகிய மாதங்களில் சமர்ப்பிக்கவும். ஆய்வுக் கட்டுரைகளை  chenkaantal@pandianeducationaltrust.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். ஆய்வுக் கட்டுரைகள் பசுமைச் சூழல் நலன் கருதி ஆண்டிற்கு இருமுறை இணையதளம் வழியாக வெளியிடப்படும்.
 

வெளியீடு / மதிப்பீட்டு கொள்கை
ஆய்வுக்கட்டுரைகள் இணையதள வெளியீடாக மட்டும் வழங்கப்படும். ஆய்வுக் கட்டுரைகள் இரு அக மதிப்பீட்டு முறைக்கு உட்படுத்தப்படுகிறது. ஆய்வுக்குட்படுத்தப்பட்ட கட்டுரைகள் மதிப்பீடு செய்த பின்னரே பி.டி.எப் ஆவணங்களாக இணையத்தில் வெளியிடப்படும்.
 

கருத்துத் திருட்டு நீக்கம்
கருத்துத் திருட்டை ஓர் அறிஞரின் கருத்திற்கு செய்யும் அநீதியாகவே இவ்விதழ் கருதுகிறது. ஆய்வாளர்களின் படைப்பில் கருத்துத் திருட்டு இருந்தால் பதிப்புக்குழு அக்கட்டுரையை நிராகரித்துவிடும்.
 

திறந்தநிலை அணுகல் அறிக்கை
திறந்தநிலை அணுகல் முறைப்படி எமது இதழ் வாசகர்கள் கட்டுரைகளை நேர்மையான முறையில் தேடவும், வாசிக்கவும், தரவிரக்கம் செய்யவும், நகல் எடுக்கவும், மற்றும் இணைப்பு எடுக்கவும் அனுமதிக்கப்படுகிறது.
 

உரிமம்
செங்காந்தள் சிசி பிஓய் கிரியேட்டிவ் காமன்சு ஆட்ரிபியூசன் 4.0 இன்டர்நேசனல் உரிமம் http://Creativecommons.org//license/by/4.0/. பயன் கொண்டுள்ளது. இது உண்மையான படைப்புக்களை தகுந்த முறைகளுடன் பயன்படுத்த, விநியோகிக்க மற்றும் மீட்டு உருவாக்கம் செய்ய அனுமதிக்கிறது.
 

பதிப்புரிமை
எமது ஆய்விதழன் பதிப்புரிமை கட்டுரையாளருக்கே உரியது.
 

கட்டுரை பரிசீலனைக் கட்டணம்
கட்டுரைகளைப் பரிசீலிக்க மற்றும் பதிப்பிற்கான கட்டணம் (APC) கிடையாது.

காப்புரிமை © 2021 – கட்டுரையாளருக்கே
செங்காந்தள் சிசி பிஓய் கிரியேட்டிவ் காமன்சு ஆட்ரிபியூசன் 4.0 இன்டர்நேசனல் உரிம http://Creativecommons.org//license/by/4.0/. பயன் கொண்டுள்ளது. இது உண்மையான படைப்புக்களை தகுந்த முறைகளுடன் பயன்படுத்த, விநியோகிக்க மற்றும் மீட்டு உருவாக்கம் செய்ய அனுமதிக்கிறது.

செங்காந்தள்

முதன்மை ஆசிரியர்

முனைவர் ஜெ. கவிதா எம்.ஏ., எம்.எட்., எம். பில்., பி.எச்.டி., நெட்., செட், எம்.எஸ்.சி (யோகா).
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
பூசாகோ அர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி,
கோயம்புத்தூர் - 641004,
தமிழ்நாடு, இந்தியா.
மின்னஞ்சல்: jkavitha@psgrkcw.ac.in
பணியிட முகப்புப் பக்கம்: https://psgrkcw.irins.org/profile/135958

துணை ஆசிரியர்

முனைவர் செ. சாந்தி எம்.ஏ., எம்ஃபில்., நெட்., செட், பிஎச்.டி., 
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
அய்ய நாடார் ஜானகிஅம்மாள் கல்லூரி,
சிவகாசி - 626123,
தமிழ்நாடு, இந்தியா.
மின்னஞ்சல்: shanthi_sf607@anjaconline.org 
பணியிட முகப்புப் பக்கம்:
https://anjaconline.org/Departments/Page/BATamil

முனைவர் அ. பரணிராணி எம்.ஏ., எம்ஃபில்., பிஎச்.டி., 
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
நா. ம. ச. ச.வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி,
நாகமலை, மதுரை- 625019.
தமிழ்நாடு, இந்தியா.
மின்னஞ்சல்: mahesparani@gmail.com
பணியிட முகப்புப் பக்கம்: https://nmssvnc.edu.in/academics/departments/department-of-tamilaided/

ஆசிரியர் குழு


டாக்டர் (திருமதி) எஸ். கேசவன் பி.ஏ., எம்ஃபில்., பி.எச்.டி.
மேனாள் தலைவர், இந்து நாகரிகத்துறை,
சிரேஷ்டவிரிவுரையாளர், கலைத்துறை, 
கிழக்குப் பல்கலைக்கழகம்,
இலங்கை.
மின்னஞ்சல்: kesavans@esn.ac.lk    
பணியிட முகப்புப் பக்கம்: https://www.fac.esn.ac.lk/hindu-civilization/academic-staff/s-kesavan    

முனைவர் மு. சுதா எம்.ஏ., பிஎச்.டி.
இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை,
அழகப்பா பல்கலைக்கழகம்,
காரைக்குடி - 630003,
தமிழ்நாடு, இந்தியா.
மின்னஞ்சல்: sutham@alagappauniversity.ac.in
பணியிட முகப்புப் பக்கம்: https://alagappauniversity.ac.in/modules/Academics/faculty-of-arts/school-of-languages/Department-of-Tamil.php#tabs-1

முனைவர் ஹெப்சி ரோஸ் மேரி எம்.ஏ., பிஎச்.டி.
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
கேரளப் பல்கலைக்கழகம், திருவனந்தபுரம் - 695034,
கேரளா, இந்தியா.
மின்னஞ்சல்: hepsy@keralauniversity.ac.in
பணியிட முகப்புப் பக்கம்: https://www.keralauniversity.ac.in/dept/staff-Details

முனைவர் பா. ஆனந்தகிருஷ்ணன் பி.ஏ., பி.எட்., எம்.ஏ., எம்ஃபில்., பி.எச்.டி.
உதவிப்பேராசிரியர், ஆசியவியல் துறை,
டெக்ஸாஸ் பல்கலைக்கழகம், ஆஸ்டின்,
டெக்ஸாஸ், அமெரிக்கா.
மின்னஞ்சல்: akanand01@austin.utexas.edu
பணியிட முகப்புப் பக்கம்: https://liberalarts.utexas.edu/asianstudies/faculty/ab72555

முனைவர் மம்தா எம்.ஏ., எம்ஃபில்., பிஎச்.டி.
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
டெல்லி பல்கலைக்கழகம்,
டெல்லி - 110007,
தமிழ்நாடு, இந்தியா.
மின்னஞ்சல்: jnu.mamta@gmail.com
பணியிட முகப்புப் பக்கம்: http://www.du.ac.in/uploads/du/Faculty%20CV/Linguistics/Linguistics_Mamta.pdf

முனைவர் த. மகேஸ்வரி எம்.ஏ (தமிழ்)., எம்.ஏ (ஆங்கிலம்)., எம்ஃபில்.,  செட்., பி.லிட்., டி.ஜி.டி. பிஎச்.டி.
பாண்டியன் கல்வி அறக்கட்டளை, 
விருதுநகர் – 626001.
தமிழ்நாடு, இந்தியா.
மின்னஞ்சல்: president@pandianeducationaltrust.com      
பணியிட முகப்புப் பக்கம்: http://pandianeducationaltrust.com/trustees.html      

மதிப்பீட்டு ஆசிரியர் குழு

முனைவர் சு. மணிமாறன் எம்.ஏ., எம்ஃபில்., பி.எட்., பிஎச்.டி., 
தலைவர் & இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை,
நா. ம. ச. ச.வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி,
நாகமலை, மதுரை- 625019.
தமிழ்நாடு, இந்தியா.
மின்னஞ்சல் முகவரி: manimaransvn@gmail.com

முனைவர் த. நிர்மலா எம்.ஏ., எம்ஃபில்., பி.எட்., பிஎச்.டி., 
தலைவர் & இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை,
திருநெல்வேலி தெட்சண மாற நாடார் சங்கம் கல்லூரி
தெ.கள்ளிக்குளம் – 627113,
தமிழ்நாடு, இந்தியா.
மின்னஞ்சல் முகவரி: nirmalaradha68@gmail.com tdmnscollege@rediffmail.com

முனைவர் சு. செல்வகுமாரன் எம்.ஏ., எம்ஃபில்., பிஎச்.டி.,
இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை,
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,
அண்ணாமலை நகர், சிதம்பரம் - 628002.
தமிழ்நாடு, இந்தியா.
மின்னஞ்சல் முகவரி: ss11399!@annamalaiuniversity.ac.in

முனைவர் சு. தாமரைப் பாண்டியன் எம்.ஏ., பிஎச்.டி., 
உதவிப்பேராசிரியர், தமிழிலக்கியம் (ம) சுவடியியல் புலம்,
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,
சென்னை - 600113.
தமிழ்நாடு, இந்தியா.
மின்னஞ்சல் முகவரி: nellaisudhaa@gmail.com

முனைவர் கி. சங்கர நாராயணன் எம்.ஏ(தமிழ்).,  எம்.ஏ (மொழியியல்)., பி.எட்., நெட்., செட், பிஎச்.டி., 
உதவிப்பேராசிரியர், தமிழ் மேம்பாட்டுச் சங்கப்பலகை,
சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை - 600005,
தமிழ்நாடு, இந்தியா.
மின்னஞ்சல் முகவரி: ksnarayanan@unom.ac.in krksankaraatamil@gmail.com

முனைவர் வெ. இரமேஷ்குமார் எம்.ஏ., எம்.எட்., எம்ஃபில்., பிஎச்.டி.,
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம்,
திருவாரூர் - 610005,
தமிழ்நாடு, இந்தியா.
மின்னஞ்சல் முகவரி: rameshkumarv@cutn.ac.in
rameshkumar150376@gmail.com

முனைவர் ஜெ. மணிச்செல்வம் எம்.ஏ., எம்ஃபில்., பிஎச்.டி.,
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
வி.;இ.நா.செந்திக்குமார நாடார் கல்லூரி,
விருதுநகர் - 626 001,
தமிழ்நாடு, இந்தியா.
மின்னஞ்சல் முகவரி: manichselvam@vhnsnc.edu.in

முனைவர் த. செல்வசங்கரன் எம்.ஏ., எம்ஃபில்., பிஎச்.டி.,
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
வி.இ.நா.செந்திக்குமார நாடார் கல்லூரி,
விருதுநகர் - 626001,
தமிழ்நாடு, இந்தியா.
மின்னஞ்சல் முகவரி: selvasankaran@vhnsnc.edu.in

முனைவர் ஞா. அந்தோணி சுரேஷ் எம்.ஏ., எம்ஃபில்., நெட்., பிஎச்.டி.,
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
சதக்அப்துல்லா அப்பா கல்லூரி,
திருநெல்வெலி - 627011,
தமிழ்நாடு, இந்தியா.
மின்னஞ்சல் முகவரி: surtamil6@gmail.com 

முனைவர் மா. முரளி எம்.ஏ., எம்ஃபில்., பிஎச்.டி.,
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
காமராஜ் கல்லூரி, தூத்துக்குடி - 628003.
தமிழ்நாடு, இந்தியா.
மின்னஞ்சல் முகவரி: muralidev1980@gmail.com 

முனைவர் தி. பரிமளா எம்.ஏ., எம்ஃபில்., பிஎச்.டி., நெட்., செட்,
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, மதுரை - 625004.
தமிழ்நாடு, இந்தியா.
மின்னஞ்சல் முகவரி: jeyamadhan05@gmail.com

முனைவர் ம. ஆனந்தவள்ளி எம்.ஏ., எம்ஃபில்., பிஎச்.டி., பி.எட்., நெட்., செட்,
கௌரவ விரிவுரையாளர், தமிழ்த்துறை,
அரசு மகளிர் கலைக்கல்லூரி, கிருட்டினகிரி – 635001,
தமிழ்நாடு, இந்தியா.
மின்னஞ்சல் முகவரி: mavalli1986@gmail.com

பதிப்பகத்தார்:
மகேஸ்வரி தர்மலிங்கம்
பாண்டியன் கல்வி அறக்கட்டளை (TN-32-0003213)
மகேஸ்வரி பப்ளிசர்ஸ், (பாண்டியன் கல்வி அறக்கட்டளையின் வெளியீட்டுப் பிரிவு)

3-350 கால்நடை மருத்துவமனை பின்புறம்,
விருதுநகர் – 626001.
Mobile: +91 8526769556
E-mail id: chenkaantal@pandianeducationaltrust.com