mega888 Programs & Events - Pandian Educational Trust


1. அறிஞர் ஆய்வு தளங்களும் மதிப்பீடும்

(Scholarly Databases and Indexing)
29.5.2020, 30.5.2020, 31.5. 2020

ஆராய்ச்சி தளத்தில் அறிஞர் சார் படைப்புகளை ஆய்வு மற்றும் மதிப்பீடு சார்ந்த தளங்களாகிய 'ஓஆர்சிஐடி', 'பப்ளன்ஸ்' (வெப் ஆஃப் சயின்ஸ்) 'ஃபிக்சேர்', 'கூகுள் ஸ்காலர்' போன்றவற்றில் பதிவிடும் முறைகளை எடுத்துரைக்கிறது. இவையாவும் பன்னாட்டு அளவில் சுயவிபரக்குறிப்பைப் பதிவேற்றிடவும், ஆய்வுக்கட்டுரைகள் மற்றும் ஏனைய படைப்புகளுக்குக் குறியீட்டு எண், மேற்கோள் பெறவும், ஆய்வுக் கருத்துகளைப் பன்னாட்டு தளங்களில் பதிவு செய்யவும், கருத்து திருட்டைக் குறைக்கவும், நிரந்தரப்பணி மற்றும் பதவி உயர்வு சார் தரத்திற்கு உயர்த்தி கொள்ளவும் உதவி புரிகின்றது.

The webinar teaches about the significance of registering scholarly works in scholarly databases and getting Indexing in ORCiD, Publons (Web of Science), Figshare, Google Scholar. This helps to create an International level scholarly profile, getting DOI for Scholarly Publications, Citations, Research reviews in databases, Anti-Plagiarism, API for regular posts and promotion.

 

2. கருத்துத் திருட்டும் அதை தவிர்க்கும் முறைகளும்

(Plagiarism and the Methods to Avoid Them)
27.6. 2020

ஆராய்ச்சித்திறன் மேம்பட்டு அதிக படைப்புகள் வெளிவந்து சமூகம் உய்வதற்கு அனைத்துத் துறைகளிலும் கருத்துத் திருட்டைத் தவிர்ப்பது அவசியமான ஒன்றாகும். - த.மகேஸ்வரி

 

3. நவீன ஆய்வுலகில் டிஓஐ-ன் (DOI) பயன்பாடு

24.7. 2020

டீஒஐ (DOI- Digital Objective Idenifer) என்பது நவீன ஆய்வுலகத்தில் பெரும்பாலும் ஆராய்ச்சி கட்டுரைகளை நிரல் மற்றும் குறிப்புக்குட்படுத்தும் முறையாகும். அநேகமாக நாம் இணையத்தில் ஓர் கட்டுரையைத் தேடும்பொழுது (404 file not found) 404 கோப்பு காணப்படவில்லை. (404 file not found) என்று கண்டு இருப்போம். ஆராய்ச்சி கட்டுரையில் ஆய்வுத் தரவுகளுக்குக் குறிப்பு கொடுக்கும் பொழுது இணைய உரலிகளை முறையான குறிப்பு முறையாகப் பயன்படுத்த முடியாது. அதற்கு சிறந்த முறையாக ஆய்வு தரவுகளை நெறிப்படுத்தும் வழிமுறைக்கு டிஓஐ (DOI) தரவுகளைச் சேமிக்கும் அமைப்பு தொடங்கப்பட்டது.

 

4. ஒரு நாள் இணையவழி பன்னாட்டுக் கருத்தரங்கம் 

தொல்லியல் தொன்மையும் அருங்காட்சியகச் சிறப்பும்


15.5.2021


          பாண்டியன் கல்வி அறக்கட்டளை மற்றும் மகேஸ்வரி பப்ளிசர்ஸ் தமிழ்மொழி மற்றும் இலக்கியத்திற்காக அரிய நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றது. சிறந்த மதிப்புரை பெற்ற ஆய்விதழ்கள், புத்தகங்கள், புத்தகப்பகுதிகள் மற்றும் கருத்தரங்க வெளியீடுகளைப் பதிப்பும் செய்து வருகின்றது. அதன் தொடர்ச்சியாக “தொல்லியல் தொன்மையும் அருங்காட்சியகச் சிறப்பும்” எனும் ஆய்வுப் பொருண்மையில் ஒரு நாள் இணையவழி பன்னாட்டுக் கருத்தரங்கம் ஒன்றை நடத்தி தமிழ்சார் தொல்லியல் மற்றும் அருங்காட்சியகத் தளத்தை ஆய்வரங்கில் பதிவிடத் திட்டமிட்டுள்ளது. ‘தொல்’ எனும் சொல் பழமையைக் குறிக்கும். ‘தொல்லியல்’ என்பது பழம்பொருளைத் தேடி அதன் மூலத் தன்மையை அரியக் கூடிய கலையாய் அமைகின்றது. நமது உலகில் எண்ணற்ற நாகரீகங்கள் தோன்றி மறைந்திருக்கின்றன. பழம்பெரும் நாகரீகங்களில் சில இன்றும் உயிர்ப்புடன் திகழ்கின்றது. அதில் தமிழர் நாகரீகம் முக்கிய இடம் வகிக்கின்றது. “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற சொல்லுக்கிணங்க தற்போதைய மாநில மற்றும் தேசிய எல்லைக்கு அப்பாலும் தமிழர் நாகரீகத்தின் தொல்லியல் சான்றுகள் கிடைக்கப் பெற்று இருக்கின்றன. மேலும், தொல்லியல் சான்றுகள் கிடைக்கப் பெறுகின்றது.
மேலைநாட்டு அருங்காட்சியகங்களிலும் தமிழர்சார் தொல்லியல் பொருட்கள் பத்திரப் படுத்தப் பட்டுள்ளன. தொல்லியல் ஆய்வு மானுடவியல், கலாச்சாரவியல், சமய-சடங்குகள், மரபியல் இன்னும் ஏனைய சமுதாயம் சார்ந்த நிகழ்வுகளைக் கண்டு தெரிந்து கொள்ள சிறந்த களப்பணியாய் அமைகிறது. தொல்லியல் அகழ்வாராய்ச்சி மற்றும் ஆய்வுகள் மூலமாக ஓர் நாகரீகத்தின் பழம்பெருமையை அறிந்து கொள்ள முடியும். அகழ்வாராய்ச்சியில் கிடைக்கப் பெற்ற பொருட்கள் மற்றும் தரவுகளைப் பத்திரப்படுத்தும் இடமாக அருங்காட்சியகங்கள் திகழ்கின்றன. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கிடைக்கப் பெற்ற தொல்பொருட்களை அந்தந்த மாவட்டங்களின் அருங்காட்சியகங்கள் பாதுகாத்து வருகின்றன. இவ்விரண்டு துறைகளையும் ஒன்றிணைத்து அரியப்பெறுகின்ற தமிழர் பாரம்பரியத்தை நன்கு ஆய்வுக்குட்படுத்தி “தொல்லியல் தொன்மையும் அருங்காட்சியகச் சிறப்பும்” எனும் ஆய்வுப் பொருண்மையில் ஒரு நாள் பன்னாட்டு இணையவழி கருத்தரங்கம் நடத்தி அரிய ஆய்வுக் கட்டுரைகளை ஆய்வுக்கோவையாக வெளியிட ஆய்வு நெறிமுறைக்குட்பட்ட தகுதியான கட்டுரைகள; வரவேற்கப்படுகின்றன. ஆய்வுக் கட்டுரைகள் கொடுக்கப் பட்டுள்ள ஆய்வுப் பொருண்மைகள் மற்றும் அது சார்ந்த செய்திகள் கொண்டு அமையலாம்.

 

5. ஆய்விதழைக்கண்டறிதல் மற்றும் பதிப்பித்தலில் சிக்கல்களும் தீர்வுகளும்
Finding Good Journals and the Problems in Publishing and Solutions

30 & 31.10.2021

ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி
தலைப்பு
ஆய்வுக்கட்டுரை வழங்குதலும் மதிப்பீடு செய்தலும்
Article Submission and Indexing

 

6. அன்புடையீர் வணக்கம் !

பெருமைமிகு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் ஆய்விதழ்களின் பேராதரவுடன்
பாண்டியன் கல்வி அறக்கட்டளையின் முதலாம் பத்து நாள் சர்வதேச இணையவழி கருத்தரங்கம். திருவள்ளுவர் ஆண்டு 2053 சித்திரை  மாதம்  14ம் தேதி முதல் - 23ம் தேதி வரை (27.04.2022- 06.05.2022) Click for Brochure - https://tinyurl.com/3c9acmp5

கருத்தரங்கத் தலைப்பு

பழையன தெளிதலும் புதியன புனைதலும்
Deciphering the Classics and Creating the Modern
       

மலாயாப் பல்கலைக்கழகம், மலேசியா.
தென்கிழக்கு பல்கலைக்கழகம், இலங்கை.
மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை, தமிழ்நாடு, இந்தியா.
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், சென்னை, தமிழ்நாடு, இந்தியா.
தில்லிப்  பல்கலைக்கழகம், புதுதில்லி, இந்தியா.
புதுவைப் பல்கலைக்கழகம், புதுவை, இந்தியா.

அ. வீரையா வாண்டையார் நினைவு ஸ்ரீ புஷ்பம் கல்லூரி, பூண்டி, தமிழ்நாடு, இந்தியா.
அரசு கலைக் கல்லூரி, நாகலாபுரம், தமிழ்நாடு, இந்தியா.
வே. வே. வன்னியப்பெருமாள் மகளிர் கல்லூரி, விருதுநகர், தமிழ்நாடு, இந்தியா.
செந்தமிழ்க் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு, இந்தியா.
மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு, இந்தியா.
ஸ்ரீ எஸ். இராமசாமி நாயுடு ஞாபகார்த்தக் கல்லூரி, சாத்தூர், தமிழ்நாடு, இந்தியா.
காமராஜ் கல்லூரி, தூத்துக்குடி, தமிழ்நாடு, இந்தியா.
    
தமிழ்மொழி மற்றும் இலக்கிய பன்னாட்டு ஆய்விதழ், விருதுநகர், தமிழ்நாடு, இந்தியா.
அரண் பன்னாட்டுத் தமிழாய்வு மின்னிதழ், சென்னை, தமிழ்நாடு, இந்தியா.
பாண்டியன் கோவில் கலைகள் தமிழ் ஆய்விதழ், விருதுநகர், தமிழ்நாடு, இந்தியா.
புலம்: பன்னாட்டுத் தமிழியல் ஆய்விதழ், விழுப்புரம், தமிழ்நாடு, இந்தியா.
செங்காந்தள், விருதுநகர், தமிழ்நாடு, இந்தியா.

கருத்தரங்க ஆலோசனைக் குழு

முனைவர் மோகன்தாஸ் இராமசாமி, திரு. நவரெட்ணம் சுபராஜ், முனைவர் வை. இராமராஜபாண்டியன்,  முனைவர் சு. நாகரத்தினம், முனைவர் சி. கார்த்திகேயன், முனைவர் தி. உமா தேவி, முனைவர் மூ. கருணாநிதி, முனைவர் எஸ். சாந்தி கேசவன்  முனைவர் ரா. சாந்தகுமாரி, முனைவர் வே.மணிகண்டன், முனைவர் நா. சிவாஜி கபிலன், முனைவர் த. வேல்மயில், முனைவர் பூ. பூங்கோதை, முனைவர் தி. பரிமளா, முனைவர் பி. ஸ்ரீதேவி, முனைவர் செ. கஸ்தூரி,  முனைவர் த. மகேஸ்வரி, முனைவர் ஞா. அந்தோணி சுரேஷ், முனைவர் பிரியா கிருஷ்ணன், முனைவர் கி. நாகேந்திரன், முனைவர் ம. சிவபாலன், முனைவர் ச. தங்கமணி, முனைவர் ஜெ. கவிதா.

பாண்டியன் கல்வி அறக்கட்டளை கல்வி, கற்றல் முறைகள், ஆராய்ச்சி மற்றும் நெறிமுறை வெளியீடு ஆகியவற்றைப் பரப்புவதற்கான கல்விச் சேவைகளை ஊக்குவித்து வருகிறது. இந்திய நாட்டில் கல்வி சார்ந்த செயல்பாடுகளை மையமாகக் கொண்டு அறக்கட்டளைச் செயல்படுகிறது. கல்விச் சமூகத்திற்கு ஆராய்ச்சி நெறிமுறை, ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதுதல் மற்றும் புத்தகம் வெளியிடுவதில் ஆலோசனைகளையும் வழங்கி வருகிறது. கலை மற்றும் மானுடத் துறையில் நவீன ஆராய்ச்சியைச் சரியான பாதையில் கொண்டுச் செல்ல பல கருத்தரங்கங்களை நடத்தி வருகிறது. இது பாண்டியன் கல்வி அறக்கட்டளையின் முதலாம் பத்து நாள் சர்வதேச கருத்தரங்கம்  ஆகும்.
தமிழ்மொழி அறமொழி என்பதுவாம். உலக நாகரிகங்களில் தமிழ்க் கலாச்சாரம் மற்றும் இலக்கியம் பன்னெடுங் காலத்திற்கு முன்னரே கீர்த்தி உடையதாய் திகழ்ந்து வருவதை உலகறியும். தமிழ் இலக்கண, இலக்கியங்கள் அனைத்தும் அருமையான வாழ்வியல் பதிவுகள், நன்னெறிச் சிந்தனைகள், ஆன்மிகக் கருத்துகள், ஒழுக்க நியதிகள், சமுதாய விழுமியங்கள் மற்றும் மானுடச் சிந்தனைகள் போன்ற வாழ்விற்கு அரிய கருத்துகளை வழங்கி உள்ளது. சமுதாயச் சீர்கேடுகளைத் தீர்க்க இலக்கியம் வழி எண்ணிலடங்காப் படைப்புகள் வெளிவருகின்றன. பழைய தமிழ்ப்படைப்புகள் அனைத்தும் மிக அருமையான ஞானத்தை வழங்குவதாகவே திகழ்கின்றன. புதிய படைப்புகள் பல சிறப்புடன் உருவாகிக் கொண்டேயும் இருக்கின்றன. இவற்றை ஆய்வுக்கு உட்படுத்துதல் அவசியமாகத் தோன்றிற்று. இக்கருத்தரங்கம் மூலம் தமிழ்த் தொன்மை மிளிரும்; மானுடம் சிறக்கும் என்பது திண்ணம். நவீன ஆய்வு முறைகள் அற்புதமான வாழ்வியல் சார்ந்த கருத்துகள் வெளிவர துணை நிற்கின்றன. அதன் பொருட்கொண்டு ஆய்வு இடைவெளி மற்றும் ஆய்வு கண்டுபிடிப்புகள் வெளிவந்து கொண்டே உள்ளன. பழம்பெரும் படைப்புகளின் பெருமைகளை இனங்கண்டு புதிய படைப்புகள் வழி அவற்றைப் புனைதல் தற்காலத்துச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு வழிவகுக்கும். எனவே, பழையன தெளிதலும் புதியன புனைதலும் எனும் தலைப்பிலான கருத்தரங்கம் தமிழ்நாட்டில் முன்னெடுக்கப்பட்டு உள்ளது. தலைசிறந்த பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் ஆய்விதழ்களில் தமிழ்மொழி மற்றும் இலக்கியம் சிறக்கப் பணியாற்றக்கூடிய பேராசிரியர்களின் சிந்தனைகளின் வழி பெறக்கூடிய ஆய்வுக்களம், ஆய்வுநெறிமுறைகள் போன்ற செய்திகளை ஆய்வாளர்கள் அறிந்து கொண்டு ஆய்வுக்கட்டுரைகளை உருவாக்க இக்கருத்தரங்கம் துணை செய்யும் என்பது உண்மை. இதன்மூலம் தமிழ்மொழி மற்றும் இலக்கியம் மென்மேலும் சிறக்கும்.


கருத்தரங்கப் பங்கேற்பு  & காணொளி நிகழ்வு

27.04.2022 & 06.05.2022 ஆகிய நாட்களில் தலைசிறந்த பன்னாட்டு மற்றும் இந்திய பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் ஆய்விதழ்களில் பணியாற்றக்கூடிய பேராசிரியர்கள் புதுமையான தலைப்புகளில் உரையாற்ற உள்ளனர். கருத்தரங்கப் பங்கேற்பிற்கானப்  பதிவுக்கட்டணம்: ரூ.1000. இணையதள காணொளி கருத்தரங்கத்தில் கலந்து கொள்பவர்களுக்கு மின்-சான்றிதழ், இதழின் மின்-மேல்தரவு (e-Metadata) மற்றும் ஒரு ISBN இலவசமாக வழங்கப்படும்.

கட்டுரையாளர் கவனத்திற்கு:

1. ஆய்வுக்கட்டுரை  தமிழ் /ஆங்கிலத்தில் அமையலாம்.
2. ஆய்வுக்கட்டுரை  ஏ4 தாளில் 12 அளவு, 1.5 இடைவெளியுடன் ஏரியல் யுனிகோடு (தமிழ்), டைம்ஸ்
நியூரோமன் (ஆங்கிலம்) எழுத்துருவில்  தட்டச்சு செய்து இருக்க வேண்டும்.
3. கட்டுரைத்தலைப்பு, பணியிட முகவரி, மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண் கண்டிப்பாக
கட்டுரையில் இருக்க  வேண்டும்.
4. ஆராய்ச்சியாளர்கள் தங்களுக்குரிய ORCID (https://orcid.org/) எண்ணை வழங்குதல் வேண்டும்.
5. ஆய்வாளர்கள் தங்கள் பயன்படுத்தும் புத்தகங்கள், ஆய்விதழ்கள், ஆய்வுக் கட்டுரைகள், ஆய்வேடுகள்
மற்றும் இணையதள தரவுகள் (மிகையான இணையதள உரலிகள் தவிர்க்கவும்) போன்ற  குறிப்புகளை நேர்த்தியான மேற்கோளிட்டுக் குறிப்புப்பட்டியலில் இடம் பெற்றிருக்கிறதா என  உறுதிச் செய்து கொள்ள வேண்டும்.
6. மேற்கோளிட்ட தரவுகள் மட்டும் துணைநூல் பட்டியலில் அமைய வேண்டும். அவை தமிழ் மற்றும்
ஆங்கிலத்தில் தமிழ் அகரவரிசையில் இடம் பெற்றிருக்க வேண்டும்.
7. ஆய்வுக்கட்டுரை ஆய்வு நோக்கம் கொண்டு கருத்துத்திருட்டு இல்லாமல் அமைந்தால் மட்டுமே
மதிப்பீட்டு நிலைக்குத் தேர்வு செய்யப்பெறும்.
8. ஆய்வாளர்களின் படைப்பில் கருத்துத்திருட்டு இருந்தால் பதிப்புக்குழு அக்கட்டுரையை  நிராகரித்துவிடும்.
9. ஆய்வுக் கட்டுரைகள் இரு அகமதிப்பீட்டு முறைக்கு உட்படுத்தப்படுகிறது.
10. அறிஞர் பெருமக்களால் மதிப்புரை வழங்கப்பட்ட சீரிய திருத்தங்கள் செய்யப்பட்ட கட்டுரைகள்
தகுதிக்கேற்ப E-ISSN & DOI எண்ணுடன் தமிழ்மொழி மற்றும் இலக்கிய பன்னாட்டு ஆய்விதழ்,  பாண்டியன் கோவில் கலைகள் தமிழ் ஆய்விதழ் மற்றும் செங்காந்தள் ஆகிய ஆய்விதழ்களில்  இலவசமாக வெளியிடப்படும்.
11. தமிழ்த்துறை சார்ந்த கல்லூரிப் பேராசிரியர்கள், தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள், படைப்பாளர்கள்,
ஆகிய அனைவரிடமிருந்தும் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. ஆய்வுக்கட்டுரையைக்  கணினிவழி தட்டச்சு செய்து 30.05.2022குள்  president@pandianeducationaltrust.com என்ற
மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புதல் வேண்டும்.
12. நெறிமுறைகளைப் பின்பற்றாத  கட்டுரைகள் நிராகரிக்கப்படும். ஆய்வுக்கட்டுரை மாதிரி பார்க்கச்  சொடுக்கவும். https://tinyurl.com/2p8799y2

கருத்தரங்கப் பதிவுக்கட்டணம் செலுத்தும் விபரம்

பசுமை வங்கி முறைகளைப் பணப்பரிமாற்றத்திற்குப் பயன்படுத்தவும். பணப் பரிவர்த்தனையைக் கீழே கொடுக்கப்பட்டுள்ள கணக்கிற்குச் செலுத்தவும். Bank: Indian Bank, Account Holder Name: Mrs. D. Pandiammal (Patron of the Trust) Account Number: 6503498159, IFSC: IDIB000V025, Branch: Virudhunagar, Tamil Nadu, India. கருத்தரங்கப் பதிவுக்கட்டணம் செலுத்தியதற்கானப் பற்றுச்சீட்டு உரிய முகவரிக்கு https://forms.gle/3x9VjHdn4rPThAPu5 வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 20.04.2022.
தொடர்புக்கு: 8526769556, president@pandianeducationaltrust.com
See Website: http://pandianeducationaltrust.com

மதிப்பீட்டுத் தளங்கள் மற்றும் ஆய்வுத் தளங்கள்

 

7. அன்புடையீர் வணக்கம் !


பெருமைமிகு பாண்டியன் கல்வி அறக்கட்டளையின் இரண்டாம் பத்து நாள் சர்வதேச இணையவழி கருத்தரங்கம். திருவள்ளுவர் ஆண்டு 2054 சித்திரை  மாதம்  14ம் தேதி முதல் - 23ம் தேதி வரை 
(27.04.2023 - 06.05.2023)

கருத்தரங்கத் தலைப்பு

தமிழ் இலக்கியமும் மேற்கத்திய திறனாய்வுக் கோட்பாடுகளும்
Tamil Literature and Western Critical Theories

Click for Brochure - https://tinyurl.com/32tznyds

 

8. Special Issue IJTLLS - அன்புடையீர் வணக்கம் !

பெருமைமிகு பாண்டியன் கல்வி அறக்கட்டளையின் இரண்டு நாள் சர்வதேச இணையவழி பயிற்சிப் பட்டறை  மற்றும் காணொளி கருத்தரங்கம். திருவள்ளுவர் ஆண்டு 2054 புரட்டாசி மாதம் 12ம் & 13ம் தேதி வரை (29.09.2023 - 30.09.2023) Volume 6, SPL Issue 1 October 2023.

பயிற்சிப் பட்டறை  மற்றும் காணொளி கருத்தரங்கத் தலைப்பு

தமிழ் சூழலியல் இலக்கியமும் வானிலை மாற்றத்தைச் சமன்படுத்தும் முறைகளும்
Tamil Ecological Literature and Ways to Balance Climate Change

Click for Brochure - https://tinyurl.com/3usxxjky

Note:

As per the norms of the regular issue, the special issue in International Journal of Tamil Language and Literary studies will follow ethical research and publishing methods in collecting articles, article selection, plagiarism check, peer review, reviewer suggestions to the author and collecting corrected articles, and to publication the article online. Due to the editorial workflow, One guest editor and five associate editors from Ijtlls members from reputed colleges are appointed to the editorial process under the dynamic guidance of the Chief Editor. The details of the special issue and details of the guest editors are in the link. The Fee fixed in the brochure (2000 INR) is only for Workshop and Virtual Webinar participation conducted by the Pandian Educational Trust to give research support, research guidance in academic paper writing, discussion on the themes, theories, and literary works, and ethical publishing methods for academic development, e-Metadata of the articles published in Ijtlls and three free ISBN numbers (after submitting book metadata, full-text plagiarism check completion) to improve their API for future career. Use Ijtlls Paper Template to draft your paper - https://tinyurl.com/unc2f48u. This Special issue committee will curate scholarly articles with ethical principles according to the norms of the Editorial workflow. It contains of submission, plagiarism check, correction, peer review process, (Double Blind), major corrections or minor corrections, suggestions and rectifications, acceptance, copy editing and production, and publication online on October 2023. Those who did not attend the workshop and conference or the papers which did not follow the rules of the journal will not be accepted. The publication of the article in the journal is free of cost.

 

9. Special Issue IJTLLS - அன்புடையீர் வணக்கம் !

பெருமைமிகு பாண்டியன் கல்வி அறக்கட்டளையின் இரண்டு நாள் சர்வதேச இணையவழி பயிற்சிப் பட்டறை  மற்றும் காணொளி கருத்தரங்கம். திருவள்ளுவர் ஆண்டு 2055 சித்திரை மாதம் 27ம் & 28ம் தேதி வரை (10.05.2024 - 11.05.2024) Volume 6, SPL Issue 2 June 2024.

பயிற்சிப் பட்டறை  மற்றும் காணொளி கருத்தரங்கத் தலைப்பு

தமிழ் இலக்கியத்தில் மானுட விழுமியங்கள்

Human Values in Tamil Literature

Click for Brochure: https://tinyurl.com/4hms9fwm

Note:

We are happy to announce a forthcoming special issue dedicated to exploring the profound theme of "தமிழ் இலக்கியத்தில் மானுட விழுமியங்கள் / Human Values in Tamil Literature." Tamil literature stands as a testament to the rich cultural heritage and linguistic brilliance of the Tamil people, offering invaluable insights into the complex tapestry of human values, ethics, and morality. This special issue aims to untie the multifaceted dimensions of human values as depicted in Tamil literary works across diverse genres, historical periods, and cultural contexts. We invite original research articles that delve into the representation, interpretation, and evolution of human values in Tamil literature. From classical Tamil literature such as Sangam literature and Bhakti poetry to modern Tamil fiction and poetry, the special issue seeks contributions that explore themes of virtue, righteousness, compassion, empathy, social justice, and more. We welcome the Tamil scholars to decode the ideas of human values from literature, philosophy and cultural studies. Submissions should offer a critical study with the theme of human values, providing fresh insights into the ethical dimensions of Tamil literary texts. All submissions will undergo a rigorous double-blind peer-review process and must adhere to the journal's guidelines for authors. Hence, we expect receiving your scholarly contributions that enrich the understanding of human values in Tamil literature to the present day modern society with follies and foibles.

As per the norms of the regular issue, the special issue in International Journal of Tamil Language and Literary studies will follow ethical research and publishing methods in collecting articles, article selection, plagiarism check, peer review, reviewer suggestions to the author and collecting corrected articles, and to publication the article online. Due to the editorial workflow, One guest editor and five associate editors from Ijtlls members from reputed colleges are appointed to the editorial process under the dynamic guidance of the Chief Editor. The details of the special issue are in the link. The Fee fixed in the brochure (2000 INR) is only for Workshop and Virtual Webinar participation conducted by the Pandian Educational Trust to give research support, research guidance in academic paper writing, discussion on the themes, theories, and literary works, and ethical publishing methods for academic development, e-Metadata of the articles published in Ijtlls and three free ISBN numbers (after submitting book metadata, full-text plagiarism check completion) to improve their API for future career. Use Ijtlls Paper Template to draft your paper - https://tinyurl.com/unc2f48u. This Special issue committee will curate scholarly articles with ethical principles according to the norms of the Editorial workflow. It contains of submission, plagiarism check, correction, peer review process, (Double Blind), major corrections or minor corrections, suggestions and rectifications, acceptance, copy editing and production, and publication online on June 2024. Those who did not attend the workshop and conference or the papers which did not follow the rules of the journal will not be accepted. Submissions after scheduled time will not be accepted. The publication of the article in the journal is free of cost.

 

10. நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் (SDG) அறிமுகம் / Introduction to Sustainable Development Goals (SDG)

A Webinar on 

நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் (SDG) அறிமுகம்  Introduction to Sustainable Development Goals (SDG)
கருத்துரை வழங்குபவர் - முனைவர் த. மகேஸ்வரி
தேதி:  23.10.2024, நேரம் :  7. 00 pm - 8.15 pm

English Gist of the program: The webinar focusses to give an introduction on the 17 sustainable Developmental Goals (SDG) to the Tamil academia and the other discipline faculty members those belong to various reputed educational institutions. This will help them to know the ongoing crisis and to get sustainable solutions. Moreover, it will give the opportunity to inculcate to the students.  

பாண்டியன் கல்வி அறக்கட்டளை, விருதுநகர் கல்வி, ஆராய்ச்சி மற்றும் சமூக வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கத்தில் செயல்படும் ஒரு அமைப்பாகும். இது, மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு உயர்தர கல்வி மற்றும் ஆராய்ச்சியினை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த அறக்கட்டளை, கல்வியில் புதிய சிந்தனைகள் மற்றும் தொழில்நுட்பங்களை ஏற்கெனவே முன்னணி வகிக்கும் விதத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது. மேலும், சமூகத்தில் உள்ள பிரச்சினைகளை மற்றும் வளர்ச்சி வாய்ப்புகளை அடையாளம் காண்பதற்கான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, அதற்கேற்ப செயல்படுகிறது. பாண்டியன் கல்வி அறக்கட்டளை, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திறனாய்வு, பயிற்சிகள் மற்றும் கண்காணிப்பு போன்றவற்றில் ஆதரவு அளிக்கும், மேலும் கல்வி மற்றும் சமூகத்திற்கான பல்வேறு அறிக்கைகள் மற்றும் இதழ்களை வெளியிடுவதற்கான திட்டங்களையும் மேற்கொள்கிறது. இதன் மூலம், அறிவியல் மற்றும் சமூகத்தில் பரந்த கருத்துக்கள், விவாதங்கள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கவும், கல்வியின் தரத்தை உயர்த்தவும் முயற்சிக்கிறது. பாண்டியன் கல்வி அறக்கட்டளை, சமூகத்தில் சமத்துவம் மற்றும் நீதியை நிலைநிறுத்துவதற்கான பணிகளில் முன்னணி வகிக்கிறது, இது அனைத்து மக்களுக்கும் கல்வி, நலவாழ்வு மற்றும் வாய்ப்புகளை வழங்குவதற்கான அடிப்படையாக அமைகிறது.
பாண்டியன் கல்வி அறக்கட்டளை, விருதுநகர், மற்றும் அதன் வெளியீடு நிறுவனங்களின் உட்பட, ஐக்கிய நாடுகள் சபையின் SDG 17 குறிக்கோள்களுக்கு இணைந்து செயல்படுவதற்கான கூட்டமைப்பினை உருவாக்கியுள்ளது. இது, கல்வி, ஆராய்ச்சி மற்றும் சமூக மேம்பாட்டு நோக்கங்களில் சிறந்த புரிதல்களை உருவாக்கும் அடிப்படையாக அமைகிறது. பாண்டியன் கல்வி அறக்கட்டளை, கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கான முன்னேற்றங்களை மேற்கொண்டு, அறிவியல் மற்றும் சமூக ஆராய்ச்சியின் முக்கியத்துவத்தை பெரிதும் உணர்கிறது. இதற்காக, அதன் வெளியீடுகள் மற்றும் இதழ்கள், SDG 17 குறிக்கோள்களின் நோக்கங்களை அடைவதற்கான முன்னணி சாதனமாக செயல்படும். இந்த கூட்டமைப்பு, பன்முகத்தன்மை, ஆட்சிக்கூட்டங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, அனைவருக்கும் கல்வி மற்றும் வாய்ப்புகளை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் மூலம், கல்வி மற்றும் ஆராய்ச்சி நலன்களை மேம்படுத்துவதற்கான பணிகளில் பங்காற்றும் ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், பாண்டியன் கல்வி நம்பிக்கையின் இதழ்களில் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளலாம். இதனால், கல்வி, சமூகம் மற்றும் பொருளாதார வளர்ச்சியின் பல்வேறு கோணங்களில் முக்கியமான விவாதங்களை உருவாக்கலாம். இவ்வாறான கூட்டமைப்புகள், புதிய அறிவுகளை உருவாக்குவதற்கும், அறிவியல் மற்றும் சமூக மேம்பாட்டிற்கான தொழில்நுட்பங்களை வளர்ப்பதற்கும் உதவும். பாண்டியன் கல்வி அறக்கட்டளையின் இதழ்கள், சமூகத்தில் உள்ள ஒவ்வொரு உள்ளாட்சியினருக்கும், சமுதாய வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான திறன்களை வளர்க்கும் வாய்ப்புகளை வழங்கும். SDG 17 குறிக்கோள்களுக்கான இந்த கூட்டமைப்பு, மக்களுக்கு சர்வதேச அளவில் இணைப்பை உருவாக்குவதில், மற்றும் திறமைகளைப் பகிர்ந்து கொள்ளும்போது, உலகளாவிய சவால்களை சமாளிக்க உதவும். பாண்டியன் கல்வி அறக்கட்டளை, இதழ்கள் மற்றும் வெளியீடுகளை ஊக்குவித்து, அனைவருக்கும் ஆற்றல், நலவாழ்வு மற்றும் சாதனைக்கான வலிமையான அடிப்படையை உருவாக்கும் நோக்கில், கல்வி மற்றும் ஆராய்ச்சி சமூகத்தில் முன்னணி வகிக்க விரும்புகிறது.

 

11. தமிழ்ச் சிறார் இலக்கியம் / Tamil Children Literature

அன்புடையீர் வணக்கம் !
பாண்டியன் கல்வி அறக்கட்டளையின் இணையவழி கருத்தரங்கம்.

திருவள்ளுவர் ஆண்டு 2055 ஆவணி   மாதம்  29ம் தேதி (14.09.2024) (10.30 a.m. - 1. 00 p.m.)

கருத்தரங்க நோக்கம்

பாண்டியன் கல்வி அறக்கட்டளையின் தமிழ்ச் சிறார் இலக்கியம் / Tamil Children Literature என்ற இக்காணொளி கருத்தரங்கத்தின் முதன்மை நோக்கம் தமிழ் இலக்கியத்தில் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட தமிழ் இலக்கியங்களை ஆராய்வது ஆகும். இந்த கருத்தரங்கம் தமிழ் சிறுவர் இலக்கியத்தின் வரலாறு, பாரம்பரியம் மற்றும் சமகால வளர்ச்சிகள் பற்றிய ஆய்வில் ஈடுபடும் அறிஞர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஆர்வலர்களுக்கு ஒரு அரிய தளத்தை வழங்குகிறது. குழந்தைகள் இலக்கிய வகையின் பல்வேறு அம்சங்களை ஆராய்வதன் மூலம் தமிழ்க் குழந்தைகளின் கதைகளுக்கு மதிப்பை வளர்ப்பது, ஆராய்ச்சியை ஊக்குவிப்பது மற்றும் இளம் வாசகர்களுக்கு புதுமையான மற்றும் கலாச்சார ரீதியாக பொருத்தமான உள்ளடக்கத்தை உருவாக்குவதை இக்கருத்தரங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இக்கருத்தரங்கம் தமிழ் சிறுவர் இலக்கியம் தொடர்பான வரலாற்று, கலாச்சார மற்றும் சமகால கண்ணோட்டங்களை மையமாகக் கொண்டது. இதன் மூலம் பங்கேற்பாளர்களுக்கு குழந்தை இலக்கிய கதைகளின் பரிணாமத்தை ஆராயவும், அவற்றின் கருப்பொருள் கூறுகளை ஆராயவும் வாய்ப்பு கிடைக்கும்.

 

12. நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் (SDG) அறிமுகம்  / Introduction to Sustainable Development Goals (SDG) - A Webinar

கருத்துரை வழங்குபவர் - முனைவர் த. மகேஸ்வரி
தேதி:  23.10.2024, நேரம் :  7. 00 pm - 8.15 pm

SDG Goal 1 - வறுமையற்ற உலகம் (No Poverty)
2030க்குள் அனைத்து வடிவங்களிலான வறுமையையும் முழுமையாக ஒழிப்பதற்கான நடவடிக்கைகள்.

SDG Goal 2 - பசியற்ற உலகம் (Zero Hunger)
உணவு பாதுகாப்பு, நல்ல ஆரோக்கியம், உணவுப்பொருட்களை மேம்படுத்தி பசியற்ற உலகத்தை உருவாக்குதல்.

SDG Goal 3 - நலவாழ்வு மற்றும் சுகாதாரம் (Good Health and Well-being)
அனைவருக்கும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தி, நோய்களைத் தடுக்கும் செயல்பாடுகள்.

SDG Goal 4 - தரமான கல்வி (Quality Education)
அனைவருக்கும் உடன்பிறப்புரிமையாக தரமான கல்வியைப் பெற்றுத்தருதல்.

SDG Goal 5 - பாலின சமத்துவம் (Gender Equality)
பெண்கள் மற்றும் ஆண்களுக்கு சம உரிமைகளை வழங்குவதன் மூலம் பாலினச் சமத்துவத்தை மேம்படுத்துதல்.

SDG Goal 6 - தூய்மையான நீர் மற்றும் சுகாதாரம் (Clean Water and Sanitation)
அனைவருக்கும் தூய்மையான குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை வழங்குதல்.

SDG Goal 7 - குறைந்த செலவில் சுத்தமான சக்தி (Affordable and Clean Energy)
ஆற்றல் வளங்களின் அதிநவீன பயன்பாட்டை உறுதிசெய்து, குறைந்த செலவில் மக்களுக்கு வழங்குதல்.

SDG Goal 8 - வேலைவாய்ப்புகள் மற்றும் பொருளாதார வளர்ச்சி (Decent Work and Economic Growth)
அனைவருக்கும் உழைப்புக்கான சமவாய்ப்புகள் மற்றும் நீடித்த பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல்.

SDG Goal 9 - தொழில், புதுமைகள் மற்றும் அடித்தள வசதிகள்  (Industry, Innovation, and Infrastructure)
தொழில்நுட்பம், புதுமைகள் மற்றும் அடித்தளங்களை மேம்படுத்துதல்.

SDG Goal 10 - சமநிலையற்றத்தை குறைத்தல் (Reduced Inequalities)
உள்ளூர் மற்றும் உலகளவில் உள்ள பொருளாதார மற்றும் சமூக சமநிலையற்றத்தை குறைத்தல்.

SDG Goal 11 - நிலையான நகரங்கள் மற்றும் சமூகங்கள் (Sustainable Cities and Communities)
நவீன மற்றும் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு ஏற்ப நகரங்கள் மற்றும் சமூகங்களை உருவாக்குதல்.

SDG Goal 12 - பொறுப்புடன் நுகர்வு மற்றும் உற்பத்தி (Responsible Consumption and Production)
சுற்றுச்சூழலுக்கேற்றபடி, பொறுப்பான உற்பத்தி மற்றும் நுகர்வை ஊக்குவித்தல்.

SDG Goal 13 - காலநிலை மாற்றத்தின் எதிரொலிகள் (Climate Action)
காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வது.

SDG Goal 14 - கடலுக்கடியில் உள்ள உயிர்கள் (Life Below Water)
கடல்  நீர்வளம் மற்றும் கடல் உயிரினங்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது.

SDG Goal 15 - பூமியின் மீது உள்ள உள்ள உயிர்கள் (Life on Land)
நிலத்தின் வாழ்க்கை வளங்களை பாதுகாத்து, வனங்கள் மற்றும் உயிரினங்களைப் பாதுகாப்பது.

SDG Goal 16 - சமாதானம், நீதி மற்றும் பலமான நிறுவனங்கள் (Peace, Justice and Strong Institutions)
அனைவருக்கும் சமநிலை, நீதி மற்றும் பலமான நிறுவனங்களின் வளர்ச்சியை உறுதிப்படுத்துதல்.

SDG Goal 17 - குறிக்கோள்களை அடைய கூட்டமைப்பு (Partnerships for the Goals)
இந்தக் குறிக்கோள்களை அடைய சர்வதேசக் கூட்டமைப்புகளை உருவாக்கி, அனைவருக்கும் ஆதரவு வழங்குதல்.

 

13. ஏழு நாள் ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி (FDP)

பாண்டியன் கல்வி அறக்கட்டளை

Women's Emancipation Forum

Academic Research News
(கல்வி ஆராய்ச்சி செய்திகள்) E-ISSN - 2584-167X

இணைந்து நடத்தும்

ஏழு  நாள் ஆசிரியர் திறன் மேம்பாட்டுப்  பயிற்சி

தமிழ் ஆய்வில் ஆராய்ச்சி மற்றும் புதுமை
(Research and Innovation in Tamil Studies)

தேதி : 04.11.24 - 10.11.2024

தமிழ் ஆய்வுகள் உலகளவில் தற்பொழுது முன்னணி இடத்தைப் பெற்றுவருகிறது. இதற்கு முக்கியமான காரணம் தமிழ் மொழியின் தொன்மை, பல்துறை சார்ந்த தன்மை மற்றும் தமிழர் பாரம்பரியம் ஆகியவற்றின் மேன்மையாகும். தமிழ் மொழி, இலக்கியம், கலாச்சாரம், வரலாறு மற்றும் சமூகப் பொறுப்புகள் போன்ற பல துறைகளில் ஆராய்ச்சி நடைபெற்றுள்ளது. மேலும், தமிழ் கல்வி, மொழிவளம், பழங்குடி பாடல்கள் மற்றும் மக்கள் மரபு ஆகிய துறைகளில் புதுமைகள் இடம்பெறுகின்றன.இன்றைய காலகட்டத்தில், தமிழ் ஆய்வுகள் புதுமையுடன் வளர்ந்து வருகின்றன. புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பங்களின் உதவியால் தமிழ் ஆய்வுகள் எளிமையாகவும் விரிவாகவும் தொடர் முன்னேற்றம் அடைந்து வருகின்றன. குறிப்பாக, தமிழ் வளர்ச்சிக்காகத் தமிழின் தொன்மையான இலக்கியங்களை டிஜிட்டல் வடிவத்தில் பாதுகாக்கும் முயற்சிகள், மொழிபெயர்ப்பு ஆராய்ச்சிகள், மக்களின் பண்பாட்டு தன்மைகள், மற்றும் கல்வி சீர்திருத்தம் போன்ற முக்கிய தளங்கள் இடம் பெற்றுள்ளன. ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சி அறிஞர்களை ஊக்கப்படுத்தி புதிய அணுகுமுறைகைளை பயன்படுத்தி சமூக வளர்ச்சிக்கு மிகசிறந்த பயனை அளிக்கும்.

 

14.  Animal Literature - A One -Day Webinar on 10.11.2024

Animal literature is a fascinating genre that portrays animals either as main characters or as symbols to explore human traits, social themes and moral lessons to portray human conflicts and political motives. This genre is seen in many cultures and has been spreading from one era to another era by taking many forms. In English literature, sea and land animals serve symbolically, metaphorically and as protagonists to explore themes of nature, survival and human characteristics. There are some notable sea animals including the great white whale in “Moby-Dick” by Herman Melville, symbolizing the mystery and danger of nature. Hemingway’s Marlin in “The Old Man” and the Sea embodies endurance and respect for nature. “The Whale Rider” by Witi Ihimaera deals with the bond between humans and whales highlighting cultural heritage and harmony with nature. “The Sea Around Us” by Rachel Carson finds the ecological complexity of marine life by emphasizing conservation. In opposition, “Jaws” by Peter Benchley uses the shark to represent primal fear and the impact of such fears on people. On land, the animal characters reveal human social dynamics. “Animal Farm” by George Orwell uses farm animals to critique political corruption. “White Fang” by Jack London follows a wolf-dog’s journey portraying survival and adaptation. “Charlotte’s Web” by E.B. White focuses on friendship and life cycles through the characters of Wilbur the pig and Charlotte the spider. Yann Martel’s “Life of Pi” uses a Bengal tiger named Richard Parker to explore survival and faith. “Alice in Wonderland” by Carroll presents themes of fantasy. Kipling’s “The Jungle Book” examines survival laws with characters like Baloo the bear and Shere Khan the tiger. It also reveals the colonial and opposition of colonialism. Animals and birds have been used in much literature across the world. In Tamil literature, cows, bulls, cuckoos, peacocks, and swans are seen in certain works. Animals embody human virtues and vices and portray the rift between man and nature. The works' motif helps inspire care and respect for the environment by encouraging empathy and ethical reflection on the natural world from human beings. Hence, this webinar will discuss Animal imagery and symbolism in Literature and evine the goals of ‘SDG 15 - Life on Land’ to provide a sustainable life for other living beings.

15. தமிழ் இலக்கியத்தில் கலாச்சாரப் பதிவுகள் / Cultural Documentation in Tamil Literature

அன்புடையீர் வணக்கம் !
பெருமைமிகு பாண்டியன் கல்வி அறக்கட்டளையின் ஒரு நாள் சர்வதேச இணையவழி காணொளி கருத்தரங்கம் மற்றும் பயிற்சிப் பட்டறை, திருவள்ளுவர் ஆண்டு 2055 மார்கழி மாதம் 13ம் தேதி (28.12.2024)


பாண்டியன் கல்வி அறக்கட்டளை

தமிழ்மொழி மற்றும் இலக்கியப் பன்னாட்டு ஆய்விதழ்
International Journal of Tamil language and Literary Studies - E-ISSN: 2581-7140
UGC CARE, MLA, DOAJ, MIAR, ERIHPLUS, MIR@BEL, SUDOC, ROAD, Sherpa Romeo, INTERNET ARCHIVE Indexed Journal

Women's Emancipation Forum

Academic Research News
(கல்வி ஆராய்ச்சி செய்திகள்) E-ISSN: 2584-167X
INTERNET ARCHIVE Indexed Journal

காணொளி கருத்தரங்கம் மற்றும் பயிற்சிப்பட்டறை நோக்கம்

தமிழர் கலாச்சாரம் போற்றுதலுக்குரியது. பண்டைய மக்களின் வாழ்வியல் நெறிகளையே கலாச்சாரமாகப் பின்பற்றி வருகிறோம். நாம் பின்பற்றும் இன்றைய கலாச்சார பழக்கவழக்கங்கள் நமது முன்னோர்களால் நமக்கு அளிக்கப்பட்டது ஆகும். அதை நமது சந்ததியினருக்கு அளிப்பது நமது தலையாயக் கடமையாகும். கலாச்சாரப் பழக்க வழக்கங்கள் மானிட விழுமியங்களின் ஆணிவேராகும். அக்காலம் தொட்டு இக்காலம் வரை மானிட விழுமியங்கள் சார்ந்த பிரச்சனைகள் இருந்த கொண்டே தான் இருக்கின்றன. அதனைச் சீர்படுத்தும் பொருட்டு எண்ணிலடங்கா படைப்புகளைத் தமிழ்ப் படைப்பாளிகளும் அறிஞர்களும் படைத்துள்ளனர். அதற்கானச் சான்று தமிழ் இலக்கியத்தில் நிறைய உள்ளது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் இலக்கியத்தில் கலாச்சாரம் பற்றிய சிந்தனைகள் மற்றும் அதன் முக்கியத்துவமும் குறிப்பிடப்பட்டுள்ளன. அவைதனைக் கொண்டு நாம் சந்தித்து வரும் கலாச்சாரம் சார்ந்த பிரச்சனைகளை அறிந்து கொள்ளவும் அதற்கான சரியான தீர்வுகளை வழங்குவதையும் மையமாகக் கொண்டு தமிழ் இலக்கியத்தில் கலாச்சாரப் பதிவுகள் / Cultural Documentation in Tamil Literature எனும் தலைப்பிலான காணொளி கருத்தரங்கம் மற்றும் பயிற்சிப்பட்டறையைத் தமிழ்நாட்டில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இக்கருத்தரங்கம் மற்றும் பயிற்சிப்பட்டறை தமிழ்மொழி சிறக்கப் பணியாற்றக்கூடிய பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் சிறந்த ஆய்வுக்கட்டுரைகளை உருவாக்கத் துணை செய்யும். தமிழ் இலக்கியத்தில் உள்ள கலாச்சாரப் பதிவுகள் நமது வாழ்க்கையில் எவ்வாறு ஒன்றியுள்ளது; தற்போதைய காலத்தில் அதில் எவ்வாறு மாறுபாடுகள் விளைகிறது; அதன் வெளிப்பாடாக உளவியல் மற்றும் அடையாள சிக்கல் எவ்வாறு தமிழ் சாமுதாயத்தைப் பாதிக்கிறது என்பதையும் அறிய இக்கருத்தரங்கம் அரும்பெரும் உதவி புரியும் என்பது திண்ணம். Brochure - https://tinyurl.com/mwbz96zs