அறிஞர் ஆய்வு தளங்களும் மதிப்பீடும்

(Scholarly Databases and Indexing)
29.5.2020, 30.5.2020, 31.5. 2020

ஆராய்ச்சி தளத்தில் அறிஞர் சார் படைப்புகளை ஆய்வு மற்றும் மதிப்பீடு சார்ந்த தளங்களாகிய 'ஓஆர்சிஐடி', 'பப்ளன்ஸ்' (வெப் ஆஃப் சயின்ஸ்) 'ஃபிக்சேர்', 'கூகுள் ஸ்காலர்' போன்றவற்றில் பதிவிடும் முறைகளை எடுத்துரைக்கிறது. இவையாவும் பன்னாட்டு அளவில் சுயவிபரக்குறிப்பைப் பதிவேற்றிடவும், ஆய்வுக்கட்டுரைகள் மற்றும் ஏனைய படைப்புகளுக்குக் குறியீட்டு எண், மேற்கோள் பெறவும், ஆய்வுக் கருத்துகளைப் பன்னாட்டு தளங்களில் பதிவு செய்யவும், கருத்து திருட்டைக் குறைக்கவும், நிரந்தரப்பணி மற்றும் பதவி உயர்வு சார் தரத்திற்கு உயர்த்தி கொள்ளவும் உதவி புரிகின்றது.

The webinar teaches about the significance of registering scholarly works in scholarly databases and getting Indexing in ORCiD, Publons (Web of Science), Figshare, Google Scholar. This helps to create an International level scholarly profile, getting DOI for Scholarly Publications, Citations, Research reviews in databases, Anti-Plagiarism, API for regular posts and promotion.

 

கருத்துத் திருட்டும் அதை தவிர்க்கும் முறைகளும்

(Plagiarism and the Methods to Avoid Them)
27.6. 2020

ஆராய்ச்சித்திறன் மேம்பட்டு அதிக படைப்புகள் வெளிவந்து சமூகம் உய்வதற்கு அனைத்துத் துறைகளிலும் கருத்துத் திருட்டைத் தவிர்ப்பது அவசியமான ஒன்றாகும். - த.மகேஸ்வரி

 

நவீன ஆய்வுலகில் டிஓஐ-ன் (DOI) பயன்பாடு

24.7. 2020

டீஒஐ (DOI- Digital Objective Idenifer) என்பது நவீன ஆய்வுலகத்தில் பெரும்பாலும் ஆராய்ச்சி கட்டுரைகளை நிரல் மற்றும் குறிப்புக்குட்படுத்தும் முறையாகும். அநேகமாக நாம் இணையத்தில் ஓர் கட்டுரையைத் தேடும்பொழுது (404 file not found) 404 கோப்பு காணப்படவில்லை. (404 file not found) என்று கண்டு இருப்போம். ஆராய்ச்சி கட்டுரையில் ஆய்வுத் தரவுகளுக்குக் குறிப்பு கொடுக்கும் பொழுது இணைய உரலிகளை முறையான குறிப்பு முறையாகப் பயன்படுத்த முடியாது. அதற்கு சிறந்த முறையாக ஆய்வு தரவுகளை நெறிப்படுத்தும் வழிமுறைக்கு டிஓஐ (DOI) தரவுகளைச் சேமிக்கும் அமைப்பு தொடங்கப்பட்டது.

 

ஒரு நாள் இணையவழி பன்னாட்டுக் கருத்தரங்கம் 

தொல்லியல் தொன்மையும் அருங்காட்சியகச் சிறப்பும்


15.5.2021


          பாண்டியன் கல்வி அறக்கட்டளை மற்றும் மகேஸ்வரி பப்ளிசர்ஸ் தமிழ்மொழி மற்றும் இலக்கியத்திற்காக அரிய நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றது. சிறந்த மதிப்புரை பெற்ற ஆய்விதழ்கள், புத்தகங்கள், புத்தகப்பகுதிகள் மற்றும் கருத்தரங்க வெளியீடுகளைப் பதிப்பும் செய்து வருகின்றது. அதன் தொடர்ச்சியாக “தொல்லியல் தொன்மையும் அருங்காட்சியகச் சிறப்பும்” எனும் ஆய்வுப் பொருண்மையில் ஒரு நாள் இணையவழி பன்னாட்டுக் கருத்தரங்கம் ஒன்றை நடத்தி தமிழ்சார் தொல்லியல் மற்றும் அருங்காட்சியகத் தளத்தை ஆய்வரங்கில் பதிவிடத் திட்டமிட்டுள்ளது. ‘தொல்’ எனும் சொல் பழமையைக் குறிக்கும். ‘தொல்லியல்’ என்பது பழம்பொருளைத் தேடி அதன் மூலத் தன்மையை அரியக் கூடிய கலையாய் அமைகின்றது. நமது உலகில் எண்ணற்ற நாகரீகங்கள் தோன்றி மறைந்திருக்கின்றன. பழம்பெரும் நாகரீகங்களில் சில இன்றும் உயிர்ப்புடன் திகழ்கின்றது. அதில் தமிழர் நாகரீகம் முக்கிய இடம் வகிக்கின்றது. “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற சொல்லுக்கிணங்க தற்போதைய மாநில மற்றும் தேசிய எல்லைக்கு அப்பாலும் தமிழர் நாகரீகத்தின் தொல்லியல் சான்றுகள் கிடைக்கப் பெற்று இருக்கின்றன. மேலும், தொல்லியல் சான்றுகள் கிடைக்கப் பெறுகின்றது.
மேலைநாட்டு அருங்காட்சியகங்களிலும் தமிழர்சார் தொல்லியல் பொருட்கள் பத்திரப் படுத்தப் பட்டுள்ளன. தொல்லியல் ஆய்வு மானுடவியல், கலாச்சாரவியல், சமய-சடங்குகள், மரபியல் இன்னும் ஏனைய சமுதாயம் சார்ந்த நிகழ்வுகளைக் கண்டு தெரிந்து கொள்ள சிறந்த களப்பணியாய் அமைகிறது. தொல்லியல் அகழ்வாராய்ச்சி மற்றும் ஆய்வுகள் மூலமாக ஓர் நாகரீகத்தின் பழம்பெருமையை அறிந்து கொள்ள முடியும். அகழ்வாராய்ச்சியில் கிடைக்கப் பெற்ற பொருட்கள் மற்றும் தரவுகளைப் பத்திரப்படுத்தும் இடமாக அருங்காட்சியகங்கள் திகழ்கின்றன. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கிடைக்கப் பெற்ற தொல்பொருட்களை அந்தந்த மாவட்டங்களின் அருங்காட்சியகங்கள் பாதுகாத்து வருகின்றன. இவ்விரண்டு துறைகளையும் ஒன்றிணைத்து அரியப்பெறுகின்ற தமிழர் பாரம்பரியத்தை நன்கு ஆய்வுக்குட்படுத்தி “தொல்லியல் தொன்மையும் அருங்காட்சியகச் சிறப்பும்” எனும் ஆய்வுப் பொருண்மையில் ஒரு நாள் பன்னாட்டு இணையவழி கருத்தரங்கம் நடத்தி அரிய ஆய்வுக் கட்டுரைகளை ஆய்வுக்கோவையாக வெளியிட ஆய்வு நெறிமுறைக்குட்பட்ட தகுதியான கட்டுரைகள; வரவேற்கப்படுகின்றன. ஆய்வுக் கட்டுரைகள் கொடுக்கப் பட்டுள்ள ஆய்வுப் பொருண்மைகள் மற்றும் அது சார்ந்த செய்திகள் கொண்டு அமையலாம்.